பவர் ஸ்டார் பவன் கல்யாண், ஹரிஷ் சங்கர், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து வழங்கும் அதிரடி திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் பிரமாண்ட முதற்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக சில படங்களை பிரத்தியேகமாகப் பகிர்ந்துள்ளனர்.
அவற்றில் பவன் கல்யாண் அடர்ந்த இருள் பின்னணியில், காக்கி உடையில் அசத்தலாகக் காட்சியளிக்கிறார். இன்னொன்றில் இயக்குநர் ஹரிஷ் ஷங்கருடன் உரையாடுவதை காணமுடிகிறது.
முன்னணி இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அசுதோஷ் ராணா, நவாப் ஷா, கேஜிஎஃப் புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா ஸ்ரீனு, நாகா மகேஷ், மற்றும் டெம்பர் வம்சி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸின் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர், உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தைப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.
