சுரேஷ் ரவி, சதீஷ் நடிப்பில் நட்பை பேசும் ‘முஸ்தபா முஸ்தபா’ விரைவில் ரிலீஸ்!

சுரேஷ் ரவி, சதீஷ் நடிப்பில், பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘முஸ்தபா முஸ்தபா.’

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் ரசிகர்களின் குட்புக்’கில் இடம் பெறத் தவறுவதில்லை. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்படியான ஒரு டார்க் காமெடி ஜானரில் இந்த படம் உருவாகியுள்ளது.

சதீஷூக்கு ஜோடியாக மோனிகா சின்னகோட்லாவும், சுரேஷ் ரவிக்கு ஜோடியாக மானசா செளத்ரியும் நடித்துள்ளனர். கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், புகழ், பாவெல் வித்தியாசமான நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா தத்தா, விஜே மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், சூப்பர்குட் சுப்ரமணி, தீப்ஸ், உமா பத்மநாபன், வினோத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் பட வெளியீடு தேதி தெரியவரும்.

எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. ஆடியோ உரிமத்தை சரிகம பெற்றுள்ளது.

படக்குழு:-
எழுத்து, இயக்கம்: பிரவீன் சரவணன்
தயாரிப்பு: மாபோகோஸ்’ பிரதீப் மகாதேவன்
ஒளிப்பதிவு: கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ
இசை: எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா டி’ஒன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here