Home சினிமா மாஸ்டர் ராஜநாயகம் நடிக்கும் வீரமான பெண்ணின் கதையாக உருவாகும் ‘வஞ்சி’ படத்தின் இறுதிக்கபட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு!

மாஸ்டர் ராஜநாயகம் நடிக்கும் வீரமான பெண்ணின் கதையாக உருவாகும் ‘வஞ்சி’ படத்தின் இறுதிக்கபட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு!

மாஸ்டர் ராஜநாயகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, விமலா ராஜநாயகம் தயாரிக்கும் 3-வது படம் ‘வஞ்சி.’ இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜேஷ் சி ஆர்.

கதை நாயகனாக ராஜேஷ் நடிக்க, கதைநாயகி வஞ்சியாக நயீரா நிகார் நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இந்த படம் தமிழ்நாடு, கேரளா மலைப் பகுதிகளின் ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரியும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் நிலைமை என பலவற்றை மையப்படுத்தி, உண்மை சம்பவப் பின்னணியில் உருவாகிறது.

தினமும் வன விலங்குகளால் ஏற்படுகிற கூலி தொழிலாளர்களின் மோசமான உயிர் பலிகள் சம்பந்தப்பட்ட விசயத்தில் அரசு செய்கின்ற பாதுகாப்பு என்ன என்பதையெல்லாம் விவரிக்கிறது கதைக்களம். அந்த இடத்தில் வாழ்கிற பெண் வஞ்சி. அவள் பெண் என்பவள் கோழையாக இல்லாமல் வீரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவள். அந்த கதாபாத்திரத்தில் மன தைரியத்தோடு, மலைக் காட்டுப் பகுதிகளில் அங்கு வாழ்கிற மக்களோடு மக்களாக நடித்து, வாழ்ந்து மிரட்டிருக்கிறார் கதை நாயகி நயீரா நிகார். எல்லோருக்கும் பாடமாக இருக்கும்படி அமைந்துள்ள இந்த் படத்தின் பாடல்கள் மண் வாசனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அவை மக்களின் மனதில் இடம் பிடிக்கும்படி இருக்கும். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வரும்” என்றார்.

படக்குழு:-

ஒளிப்பதிவு – ஃபென்சீர்

இசை: சஜித் சங்கர்

படத்தொகுப்பு: ஜெயகிருஷ்ணன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்