Home சினிமா இலங்கை ராப் பாடகர் வாகீசன், பிக்பாஸ் ஜனனி நடிக்கும் ‘மைனர்’ ரோம்காம் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

இலங்கை ராப் பாடகர் வாகீசன், பிக்பாஸ் ஜனனி நடிக்கும் ‘மைனர்’ ரோம்காம் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கும் ரோம்காம் திரைப்படம் ‘மைனர்.’

இலங்கை ராப் பாடகர் வாகீசன் நாயகனாக நடிக்க, பிக்பாஸ் ஜனனி நாயகியாக நடிக்கிறார். சார்லி, செண்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பதுதான் படத்தின் மையம். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான். அந்த காதல் மீண்டும் சேர்ந்ததா, இருவரும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று நடைபெற்றது.

படத்தை Arabi production & Viyan ventures மற்றும் MayDay Productions நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

படக்குழு:-
எழுத்து, இயக்கம்: வினோத் ராஜேந்திரன்
ஒளிப்பபதிவு: றெஜி செல்வராசா
இசை: சூர்ய பிரசாத் ஆர்
படத்தொகுப்பு: அருண் பிரசாத் எஸ்
கலை: அசோக்சந்தர்
ஆடை வடிவமைப்பு: பிரியாதர்ஷினி
டிஐ: கார்த்திகேஷ்
ஒலி வடிவமைப்பு: சதீஷ் குமார் ஏ
பப்ளிசிட்டி வடிவமைப்பு: ராகவ்ஆர்ட்ஸ்
தயாரிப்பு மேற்பர்வை: ஹெட்விஜ்ஜெ பி சூர்யா
தயாரிப்பு உதவி: நவீன் பிரபு, வினோத் பாபு
மக்கள் தொடர்பு: ஏ ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்