Home Uncategorized ‘தக் லைஃப்’ டிரெய்லர் என்னவெல்லாம் சொல்கிறது? எதையெல்லாம் காட்டுகிறது? ஒரு மினி அலசல்…

‘தக் லைஃப்’ டிரெய்லர் என்னவெல்லாம் சொல்கிறது? எதையெல்லாம் காட்டுகிறது? ஒரு மினி அலசல்…

தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகமே எதிர்பார்க்கிற இல்லையில்லை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்க்கிற படம் ‘தக் லைஃப்.’

உலகநாயகன் கமல், ஸ்டைலிஷ் ஸ்டார் சிலம்பரசன் எஸ் டி ஆர், திரிஷா என பலர் நடித்திருக்க, மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

முன்னதாக இன்று (மே 17; 2025) பிரபலமான இன்ப்ளூயன்ஸர்ஸ் முன்னிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

‘நீ என் உயிரக் காப்பாத்துனவன்; எமன்கிட்டயிருந்து என்னை மீட்டெடுத்தவன்’ என கமல்ஹாசன் பேசும் நெகிழ்ச்சியான வசனத்துடன் துவங்குகிறது அந்த டிரெய்லர். தொடர்ந்து ஒரு சிறுவனிடம் கமல்ஹாசன் ‘இனிமே நீயும் நானும் ஒண்ணு; கடைசி வரைக்கும்’ என பேசுவதாய் தொடர்கிறது.

அப்படியே ஏ ஆர் ரஹ்மானின் இதயத்தை வருடும் இசையில் அஞ்சு வண்ண பூவே’ பாடல் ஒலிக்க, சட்டென ஒரு கார் அதிரடி வேகத்தில் புழுதியைக் கிளப்பியபடி சுழன்று நிற்க காரிலிருந்து புன்னகையுடன் ஒரு லுக் விடுகிறார். அது அத்தனை அசத்தலாக இருக்கிறது.

அப்படியே காட்சிகள் தடம்மாற, இரண்டு வாரங்கள் முன் வெளியான ‘ஜிங்கு ஜிங்குச்சா’ பாடலில் பார்த்த கமல்ஹாசன் சிலம்பரசனின் உற்சாக ஆட்டம் கடந்தோடுகிறது.

பின்னர் வருவதெல்லாம் அதிரடிதான்… அதிலிருந்து அத்தனை பிரியமாக பழகிய, ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக நாட்களைக் கழித்த கமலும் சிலம்பரசனும் ஒரு கட்டத்தில் மோதிக் கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. படத்தில் ஆக்சன் காட்சிகள் வேற லெவல் வெறித்தனமாகவும், சென்டிமெண்ட் காட்சிகள் மனதை உருக்குவதாகவும் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் தருகிறது.

இன்னொரு விசேஷ செய்தி… கமலின் வழக்கமான முத்தக்காட்சியும் டிரெய்லரில் இருக்கிறது. படத்தில் அதெல்லாம் சிலிர்ப்பூட்டப் போவது நிச்சயம்.

இரண்டு நிமிடங்களுக்குள் ஓடி நிறைவடையும் இந்த டிரெய்லர் சொல்கிற ஒரே விஷயம் ‘ஜூன் 5 தியேட்டர்களில் அசத்தலான அதிரடியான சம்பவங்கள் காத்திருக்கிறது.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்