Home சினிமா பவன் சாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும்; அதை வைத்து இந்த படத்தில் மிகப் பெரிய சாதனை...

பவன் சாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும்; அதை வைத்து இந்த படத்தில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார்! -சென்னையில் நடந்த ‘ஹரி ஹர வீர மல்லு’ பட விழாவில் படத்தின் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா பேச்சு

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் நான்காவது பாடலான ‘டாரா டாரா’ பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா பேசியபோது, ”நான் இந்த படம் துவங்கியபிறகு நான்கு வருடங்களாக தமிழ்நாட்டிற்கு வரவே இல்லை. தமிழ் சினிமாவில் நான் மீண்டும் படம் இயக்குவேனா என்று சந்தேகமாக இருந்தது.

ஹர ஹர வீர மல்லு படத்தை இயக்கும்போது இவ்வளவு பெரிய ஃபேன் இந்தியா படமாக வரும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை

நான் சுமார் 8 வருட காலம் படத்தை இயக்காமல் இருந்தேன். அதற்கு காரணம் அஜித் சார் என்னிடம் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை, அவரை கவனித்துக் கொள்ளுங்கள். தயாரிப்பு வேலைகளை பாருங்கள் அது உங்களுக்கு நன்றாக வரும் என்று சொன்னார். எவ்வளவு பெரிய ஸ்டார் நம்மைப் பற்றியும் நமது அப்பாவை பற்றியும் சிந்திக்கிறார் என்று அன்றோடு இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆனால் நான் தயாரிக்க வேண்டும் என்றால் அடுத்தடுத்து படங்கள் வேண்டும் என்றேன். நான் நடிக்கிறேன் என்று தொடர்ந்து மூன்று படங்கள் கொடுத்தார், ஆரம்பம், என்னை அறிந்தால் மற்றும் வேதாளம். ஆனால், இதன் பிறகு அவர் சூர்யா மூவிஸ் மூவிஸ்க்கு நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனாலும், அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதை காப்பாற்றுவார்.

எட்டு வருடங்கள் கழித்து பவன் சாரை சந்தித்தேன். எப்படியாவது இந்த படத்தை வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்று கூறினர். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் என் மீதும் அப்பா மீதும் வைத்திருக்கும் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயம் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காக நாம் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பவன் கல்யாண் சார் மிகவும் புத்திசாலி தனிப்பட்ட இயக்குனரும் கூட. அவர் அரசியல் பொது சேவையில் ஈடுபட்டதால் அவருக்கு இயக்குவதற்கான போதுமான நேரம் இல்லை ஆனால் இந்த படத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்று கடினமாக உழைத்து இருக்கிறார். நீங்கள் பார்த்த அசுரனா சாங் பாடலை அவரே நடனம் மற்றும் சண்டை காட்சிகளை இயக்கினார். சண்டை காட்சிகள் மட்டுமே 60 நாட்கள் எடுத்திருக்கிறோம்.

பவன் சாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். அதை வைத்து இந்த படத்தில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார். இந்த படம் 16ஆம் நூற்றாண்டு முகலாயப் பேரரசு ஔரங்கசீப்பின் காலகட்டத்தில் நடக்கும் கதை. பாபிதியோல் ஔரங்கசீப்பாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் கதையை எழுதும்போது ஔரங்கசீப் என்ன சொல்ல வருகிறார் இந்த என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அஜந்தா எல்லோரா போன்ற சுற்றுலா இடங்களை பார்வையிட்ட ஒரு குழுவினரை நிறைச்சவ சந்திக்க நேர்ந்தது அவர்கள் திடீரென்று அவுரங்கசீப்பை திட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது மிகவும் இணையாக இருந்ததால் அவர்களிடம் பேசினேன் அப்போது அஜந்தா எல்லோரா போன்ற இடங்களில் எவ்வளவு சிற்பக் கலைகளை வடித்து வைத்திருக்கிறார்கள் அதை இப்போது அழித்து வருகிறார்கள் வருங்கால சந்ததியர்களுக்கு இதுபோன்ற சிற்பக்கலை இருந்தது தெரியவே கூடாத வகையில் அழைத்து வருகிறார்கள் என்று கூறினார்கள். அந்த ஒரு சின்ன பொறி தான் இப்படத்தை உருவாக்கியது. பவன் கல்யாண் சார் நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிக்கக் கூடாது என்பதற்காக எவ்வாறு போராடுகிறார் என்பதை படத்தின் கதை.

இந்த கதை எழுதி இரண்டு வருடங்களுக்குப் பிறகு பவன் கல்யாண் சார் துணை முதலமைச்சர் ஆகிறார். அப்போது திருப்பதி சம்பவத்தில் சனாதன தர்மத்தை நிலை நாட்ட குரல் கொடுக்கிறார். இந்த படமும் சனாதன தர்மத்தை நிலை நாட்ட கூடிய ஒரு படம் தான்.

அவன் சாரி பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் யாராவது ஒருவர் பிரச்சனையோடு வந்தால் மற்றவர் பிரச்சனையை தன் பிரச்சினையாக பார்த்து அதை தீர்ப்பார். படப்பிடிப்பு இருக்கும்போது அரசியல் சேவைகளையும் பார்த்துக் கொண்டு இடைவிடாமல் நடித்து விட்டு செல்வார்.

அடுத்து, நான் எப்படி உயர்ந்த தரத்தில் ஒரு படத்தை நினைப்பேனோ அதேபோலத்தான் வருணும். ஒவ்வொரு காட்சிகளையும் 5 கேமராவை வைத்து படம் பிடித்தோம். இந்தியாவில் உலகத்தில் உள்ள அனைத்து கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தையும் இதில் பயன்படுத்தி இருக்கிறார் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் வரும்போது இந்த தொழில்நுட்ப வேலைகளுக்காக தான் இவ்வளவு வருடங்கள் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் கடைசி 15 நிமிடங்கள் யாரும் இதுவரை எதிர்பார்க்காத காட்சிகளாக இருக்கும்.

நிதி அகர்வால் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்கும் போது சிறிது பதட்டமாக இருந்தால் ஆனால் ஒரு காட்சியில் இவர் எதிர்பாராத விதமாக நிஜகத்தியை வைக்கும் போது பயந்துவிட்டார் அந்த காட்சி படத்தில் யதார்த்தமாக அற்புதமாக வந்திருக்கிறது.

நாசர் சாருக்கு நன்றி சத்தியராஜ் சாருக்கும் நன்றி நான் சத்யராஜ் சாருடைய மிகப்பெரிய ரசிகன் அவர் எம்ஜிஆர் மாதிரி நடிக்கும் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நான் எப்போதும் கதாநாயகனாக தான் பார்ப்பேன். சோபி அருமையாக நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

கீரவாணி சாரிடம் ஒரு பாடலை எழுதி அதற்கு அவர் இசையமைப்பாரா என்று தயங்கினேன். அவர் பார்த்ததுமே மிகவும் அருமையாக இருக்கிறது என்று இசையமைத்தார். மேலும் அந்த பாடலை பவன் சார் பாடினால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்டார். இதைக் கேட்டதும் பவன் சாரும் ஆர்வம் ஆகிவிட்டார். ஆனால், இவர் விஜயவாடாவிலும் அவர் ஹைதராபாதிலும் இருந்தார்கள். உடனே தன்னுடைய குழுக்களை அழைத்து விஜயவாடாவிற்கு சென்று பவன் கல்யாண் சாரை நேரலையில் பாட வைத்து பதிவு செய்தார்.

தோட்டதரணி சார் இந்த வயதிலும் ஆர்வமாக உழைப்பதே பார்க்கும்போது சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிந்தது. ஆனால், இப்போது இருக்கும் தலைமுறையினர் 25% கூட வேலை செய்வதில்லை.

ஜூன் 12ஆம் தேதி படம் வெளியாகிறது. அதற்கு பிறகு இந்தியாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த படம் வெளியானதும் விரைவில் இதனுடைய 2-ம் பாகமும் வெளியாகும்” என்றார்.

நடிகர் சத்யராஜ், நடிகர் நாசர், நடிகர் தலைவாசல் விஜய், கதை ஆசிரியர் பூபதி ராஜா, நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர், நடிகை நிதி அகர்வால், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, விநியோகஸ்தர் சக்திவேல், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்று பேசினார்கள்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்