தக்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘துண்டு பீடி.’
போதைப் பொருட்களை விற்கும் ஒருவனால் பாதிக்கப்பட்ட இருவர், அவருக்கு எதிராக போராடி ஜெயித்தார்களா, இல்லையா என்கிற கதையை விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தில் தலைவாசல் விஜய், சாய் தீனா, வனிதா விஜயகுமார், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தை ‘மகிழ் புரொடக்சன்ஸ்’ சி.பியூலா மகிழ் தயாரித்துள்ளார்.
தக்ஷன் தமிழில் கபளீகரம், ஐ அம் வெயிட்டிங் மற்றும் மலையாளத்தில் இத்திகார கொம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
