யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் நடித்த ‘தூக்கு துரை’ படத்தின் கேரள திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்ற ‘பிஎஸ்எஸ் புரொடக்சன்ஸ்.’

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர் நடித்துள்ள முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் ‘தூக்கு துரை.’

‘டிரிப்’ திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த படைப்பாக இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படம் வரும் ஜனவரி 25-ம் தேதி தைப்பூச வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படத்தை ‘ஓப்பன் கேட் பிக்சர்ஸ்’ அர்விந்த் வெள்ளை பாண்டியன், அன்புக்கரசு ஆகியோர் தயாரித்துள்ளனர். இணை தயாரிப்பினை வினோத் மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தை கேரள திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ‘No.6. வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ படத்தின் தயாரிப்பாளரான ‘பிஎஸ்எஸ் புரொடக்சன்ஸ்’ டாக்டர் பிரீத்தி சங்கர் பெற்று வெளியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here