Home சினிமா அப்பா விஜயகாந்த் பாணியில் படக்குழுவினருக்கு புதிய உடைகளோடு பிரியாணி விருந்து… ‘கொம்பு சீவி’ படத்தின் படப்பிடிப்பு...

அப்பா விஜயகாந்த் பாணியில் படக்குழுவினருக்கு புதிய உடைகளோடு பிரியாணி விருந்து… ‘கொம்பு சீவி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவில் நடிகர் சண்முகபாண்டியன் அசத்தல்! 

நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் கொம்புசீவி திரைப்படம் கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டு, சென்னையில் நிறைவுற்றது. அதையடுத்து பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கியுள்ளது.

இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார்.

நடிகர் விஜயகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போதும் படக்குழுவினர் அனைவருக்கும் அறுசுவை உணவும், புது உடைகளும் வழங்குவது வழக்கம்.

அதேபோல் அவரது மகன் சண்முகபாண்டியன் ‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி கௌரவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்