Home சினிமா படத்தில் இசை, பாடல் எல்லாம் நன்றாக உள்ளது; கதாநாயகி அழகாக இருக்கிறார்! –உருட்டு உருட்டு பட...

படத்தில் இசை, பாடல் எல்லாம் நன்றாக உள்ளது; கதாநாயகி அழகாக இருக்கிறார்! –உருட்டு உருட்டு பட விழாவில் இயக்குநர் ஆர்வி. உதயகுமார் பேச்சு

நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடிக்க, பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க கதைக்களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ‘உருட்டு உருட்டு.’

கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் நாயகன் கஜேஷ் நாகேஷ், ”இந்தப்படம் கொஞ்சம் கஷ்டத்தில் தான் ஆரம்பித்தோம், தயாரிப்பாளர் ஜெய் அண்ணா இந்தப்படத்தை நன்றாக செய்வோம் என உழைத்துள்ளார். இசையமைப்பாளர் அருமையான இசையை தந்துள்ளார். தினா மாஸ்டர் அருமையான நடன அமைப்பை அமைத்துள்ளார். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா, ”உருட்டு உருட்டுன்னு டைட்டிலை கவர்ச்சியாக வைத்துள்ளார்கள். தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல்லா டெக்னிசியன்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், எல்லாரும் ஜெயிக்கணும்” என்றார்.

இயக்குநர் ஆர்வி. உதயகுமார் ”படத்தில் இசை பாடல் எல்லாம் நன்றாக உள்ளது. தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். கதாநாயகி அழகாக இருக்கிறார். நன்றாக நடித்துள்ளார். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாஸ்கர் சதாசிவம், கஜேஷ் நாகேஷின் தந்தை நடிகர் ஆனந்த்பாபு, படத்தின் நாயகி ரித்விகா ஸ்ரேயா, தயாரிப்பாளர் பத்மராஜு ஜெய்சங்கர், இயக்குநர் விக்ரமன்உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்