Home சினிமா ஆணவக் கொலைகளால் அதிர்ந்து கொண்டிருக்கும் தமிழகம்… பரபரப்பும் விறுவிறுப்புமாக உருவான ‘நெல்லை பாய்ஸ்’ அக்டோபரில் ரிலீஸ்!

ஆணவக் கொலைகளால் அதிர்ந்து கொண்டிருக்கும் தமிழகம்… பரபரப்பும் விறுவிறுப்புமாக உருவான ‘நெல்லை பாய்ஸ்’ அக்டோபரில் ரிலீஸ்!

தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவப் படுகொலைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் ‘நெல்லை பாய்ஸ்.’

சமூகத்தில் ஆணவக் கொலை இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. அதில் படுகொலைகளில் தென் தமிழகம் முக்கிய பங்குவகிக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டும் விதமாகவும், ஈவு இரக்கமற்ற கல் நெஞ்சங்களையும் கலங்க வைக்கும் விதமாகவும் இந்த படம் உருவாகியுள்ளது.

கதையின் நாயகனாக அறிவழகனும் நாயகியாக ஹேமா ராஜ்குமாரும் நடிக்க வில்லனாக வேல ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, எடிட்டிங் பணிகளை செய்துள்ளார் கமல் ஜி.

இந்த படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டார்.

படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டதிலிருந்து பல்வேறு விமர்சனங்களப் பெற்றாலும், விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வரும் பணிகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் வி ராஜா.

காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நெல்லைச் சீமை. நெல்லை நட்புக்கு தனி தரம் உண்டு. அவை இந்த படத்தில் தெரியுமாம்.

படத்திற்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்க, ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.

படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. படத்தை ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்