ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் ‘சத்தமின்றி முத்தம் தா’ என்ன மாதிரியான படம்? சொல்கிறார் இயக்குநர் ராஜ் தேவ்

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ள படம் ‘சத்தமின்றி முத்தம் தா.’

லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற ராஜ் தேவ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

படம் பற்றி அவரிடம் கேட்டபோது, ”இது காதலும் சஸ்பென்ஸும் கலந்த திரில்லர் திரைப்படம். எதிர்பாராத திருப்புமுனைகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக புனையப்பட்டது.

ஸ்ரீகாந்த் இதுவரை ஏற்றிராத புது விதமான கதாபாத்திரத்தில் ஒரு வித்தியாசமான அணுகு முறையில் நடித்துள்ளார். அவரும் ஹீரோயின் பிரியங்கா திம்மேஷ் இருவரும் நடிக்கும் காட்சிகளில் பார்வையாளர்கள் முழுவதுமாக ஈர்க்கப்படுவார்கள். நடிகர் ஹரிஷ் பெராடி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படத்தின் பாடல்கள் சரிகம ஆடியோவில் வெளியாகி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன” என்றார்.

‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் இயக்குநர் எழுதிய சிறுகதைகள் ஆனந்த விகடன், சாவி இதழ்களில் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ என்ற இரண்டு கதைகள் இவர் எழுதியவை. அந்த கதைகள் அமெரிக்காவில் அச்சிடப்பட்டு வெளியானதோடு இணையத்தின் கிண்டில் பதிப்பாகவும் வெளியாகியுள்ளது.

சத்தமின்றி முத்தம் தா படக்குழு:
தயாரிப்பு: ‘செலிபிரைட் புரொடக்ஷன்ஸ்’ கார்த்திகேயன்.எஸ்
தயாரிப்பு மேற்பார்வை: ஏ ஜெ பி ஆனந்த்
ஒளிப்பதிவு: யுவராஜ்.எம்
படத்தொகுப்பு: மதன்.ஜி
நடனம்: தினேஷ்
சண்டைப் பயிற்சி: ‘மிராக்கிள்’ மைக்கேல்
பாடல்களைப் பாடியவர்கள்: ஆண்ட்ரியா, எம் எம் மானசி, ஜித்தின் ராஜ், ரவி.ஜி
மக்கள் தொடர்பு: மணவை புவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here