Home சினிமா இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத பிரமாண்டம்… 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட குடிசைப் பகுதியை உருவாக்கி...

இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத பிரமாண்டம்… 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட குடிசைப் பகுதியை உருவாக்கி படப்பிடிப்புக்கு தயாராகும் தி பாரடைஸ்’ படக்குழு! 

இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே அமைக்கப்படாத, 30 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய சேரிப் பகுதியை பாரடைஸ் படத்திற்காக பிரமாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், இந்த சேரி உருவாக்கப்படவுள்ளது.

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘தசரா’ மூலம் மாபெரும் வெற்றிபெற்ற திறமையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக உருவாகிவருகிறது. அதற்காகவே மிகப்பெரிய குடிசைப்பகுதி செட் ஹைதராபாத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.

படக்குழுவின் தகவலின்படி, “பாகுபலி படத்தில் காணப்பட்ட மகிழ்மதி பேரரசை போல், இங்கு குடிசைப்பகுதி பேரரசு உருவாக்கப்படுகிறது. கதாநாயகன் குடிசைப்பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்து, பின்னர் உச்சத்துக்குச் செல்வதை படத்தில் காண்பிக்கின்றனர். அவ்வளவு பெரிய கதைப் பயணத்தை காட்டுவதற்காகவே இந்த மாபெரும் செட் அமைக்கப்படுகிறது. அந்த குடிசைப்பகுதியின் மையத்தில் ஒரு பெரிய வளைவு (Arch) இருக்கும். இதனை நாம் அண்மையில் வெளியான அறிவிப்பு வீடியோ மற்றும் போஸ்டர்களில் பார்த்தோம். அந்த வளைவு கதாநாயகனின் பேரரசின் அடையாளமாக அமையும்.” என்று கூறப்படுகிறது.

இந்த செட் அமைப்பு பாகுபலி படத்தில் காணப்பட்ட மாபெரும் மகிழ்மதி பேரரசின் அளவுக்கு இணையானதாக இருக்கும், ஆனால் இங்கு பிரமாண்ட அரண்மனைகளுக்குப் பதிலாக ஆங்காங்கே ஆர்ப்பரிக்கும் குடிசைப்பகுதிகள் காணப்படும். இதன் மூலம் ‘ஸ்லம்ஸ்களின் பாகுபலி’ செட்டை பார்வையாளர்களுக்காக படக்குழு உருவாக்கி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்