இசைஞானி இளையராஜா; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; உலகநாயகன் கமல்ஹாசன்… யதீஷ்வர் ராஜாவின் இசையில் உருவான ‘போற போக்குல’ தனியிசைப் பாடலுக்காக இணைந்த பிரபலங்கள்!  

இசைஞானி இளையராஜாவின் வசீகரக் குரலில் மனதைக் கவர்கிற ‘போற போக்குல’ தனியிசைப் பாடலை நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலுக்கு இசையமைத்த யதீஷ்வர் ராஜாவின் குரலிலும் இந்த பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர் யதீஷ்வர் ராஜா என இரண்டு தலைமுறை இசை மேதைகள் இணைந்திருக்கும் இந்த பாடலின் வரிகளை தமிழ் சினிமாவில் தனித்துவமான எழுத்துக்களால் கவனம் பெற்ற விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.

பாடலுக்கான காட்சியை கார்த்திக் பி.கே இயக்கியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முன்னாள் உதவியாளர் புதுமையான காட்சியமைப்புடன் பாடலுக்கான கலைப்பணியை செய்துள்ளார்.

பல்வேறு திறமைகளை ஒருங்கிணைத்திருக்கும் இந்த பாடலும் இசையும் தமிழ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கவுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here