ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு 123 சர்வதேச விருதுகளை வென்ற த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ் (முகமற்றவரின் முகம்) நவம்பர் 21-ம் தேதி முதல் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

உலக சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த த ஃபேஸ் ஆஃப் த ஃபேஸ்லெஸ் (முகமற்றவரின் முகம்) என்ற படம் 2024-ம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றது.

2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த படம், கிறிஸ்தவ துறவியான சகோதரி ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றுகிறது. இந்தியாவின் மத்திய பிரதேசம், இந்தூரில் மத எல்லைகளை தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்ட தன்னலமற்ற சேவை எண்ணற்றவர்களுக்கு வழிகாட்டியதாக உள்ளது.

ஆழ்ந்த ஆன்மீக உணர்வு, தியாகம், அன்பு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு போன்ற உயர்ந்த கருத்துகளுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 136 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெகுசனத்தை அடையும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், மாதா டிவி உறுதுணையுடன் நவம்பர் 21 ஆம் தேதி முதல் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே நாளில் தெலுங்கு மொழியில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியாக இருப்பது சிறப்பு.

2023 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம், ஆறு வாரங்களுக்கு மேல் சிறப்பான வரவேற்பைப் பெற்று, மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, பெரும் பாராட்டுகளையும் ஆதரவையும் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here