பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் இசையமைப்பில் சித்தார்த் நடிக்கும் புதிய படம்!

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தை ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீ கணேஷ் இயக்க, சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கவிருக்கிறார்.

‘வசீகரா’, ‘ஒன்றா இரண்டா’ உள்ளிட்ட பாடல்களையும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் உலகப்புகழ் பெற்ற பாடலைப் பாடியவருமான பாம்பே ஜெயஸ்ரீயின் மகன்தான் அம்ரித் ராம்நாத்.

நடிகர் சித்தார்த் தனது படங்களுக்கு புதிய இசையமைப்பாளர்களுடன் கைக்கோர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார். இந்த முயற்சி அவரது முந்தைய படங்களுக்கும் சிறந்த இசையையும் பாடல்களையும் கொடுத்தது.

அம்ரித் 25 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார். திரைப்படங்கள் மற்றும் சுயாதீன ஆல்பங்கள் இரண்டிற்கும் இசையமைத்துள்ளார்.

பிரணவ் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர்ஹிட் மலையாளத் திரைப்படமான ’வர்ஷங்களுக்கு சேஷம்’ திரைப்படத்தில் அவர் இசையமைத்த ‘நியாபகம்’ பாடல் அதிக பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் பாடல் ஒவ்வொருவரது பிளேலிஸ்ட்டிலும் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் ’சித்தார்த் 40’ படத்தின் மூலம் தமிழ்த் துறையில் அவர் அறிமுகமாகி இருப்பது பல நல்ல பாடல்களை தரும் என உறுதியாக நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here