Home Uncategorized காதல்,  நட்பு, குடும்ப உணர்வுகளின் கலவையாக 2005-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான ‘மாயபிம்பம்’ ஜனவரி...

காதல்,  நட்பு, குடும்ப உணர்வுகளின் கலவையாக 2005-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான ‘மாயபிம்பம்’ ஜனவரி 23-ல் ரிலீஸ்!

ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கே ஜெ சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மாயபிம்பம்.’ இந்த படம் வரும் ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

2005-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும், 90-களில் வளர்ந்தவர்களுக்கு இனிய நினைவுகளாகவும் இந்த படம் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘எனக்குள்ளே’ என தொடங்குகிற இந்த படத்தின் ஹிட் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகை வாணி போஜன் வெளியிட்டு, பாராட்டி, படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இயக்குநர் சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, பாடல்களையும் கேட்டுப் பாராட்டியுள்ளார்.

பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.

இந்த படத்தில் நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என மற்ற துறையினரும் புதிய முகங்கள் என்பது சிறப்பம்சம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்