Home சினிமா ஜெயராம், நகுல் இணையும் காதல் கதை சொல்லவா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி… படம்...

ஜெயராம், நகுல் இணையும் காதல் கதை சொல்லவா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி… படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகிறது.

ஜெயராம் மற்றும் நகுல் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காதல் கதை சொல்லவா’ பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகிறது.

ஆத்மிகா, ரித்திக்கா சென் இருவரும் இந்த படத்தின் கதாநாயகிகள். ரமேஷ் திலக் உள்ளிடோரும் நடித்துள்ளனர்.

மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு கதை எழுதி, திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் சனில். படம் பற்றி அவரிடம் கேட்டபோது, ”மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான காதல் கதை இது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத புதிய பரிணாமத்தில் வருகிறார். மனித உணர்வுகள், நம்பிக்கை, காதல், தியாகம், மற்றும் மனிதநேயத்தின் வலிமையை சொல்கின்ற மனதை நெகிழ வைக்கும் படமாக இருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்