சென்னை ஆயுஷ் அரிமா (Lions Club of Aayush) சங்கத்தின் சிறப்புக் கூட்டம் ஜூலை 27; 2024 சனிக்கிழமை காலை சென்னை கிராண்டு ஓசானியா ரிசார்ட்டில் நடந்தது.
லயன் டாக்டர் பி சரவண சிவா அவர்கள் விழாவை துவக்கி வைக்க, புதிய தலைவராக லயன் டாக்டர் பி இராமசாமி, செயலாளராக லயன் டாக்டர் சந்திரகுமார்.என், பொருளாளராக லயன் டாக்டர் எம் பி அகத்தியர் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஏழை குழந்தைகளின்பள்ளி படிப்புக்காக கல்வி உதவிகளும் செய்து, சேவை பணிகளை டாக்டர் பி இராமசாமி தொடங்கி வைத்தார்.
பிரபல மருத்துவர் டாக்டர் பி ராம்குமார் யாதவ், சர்வதேச விளையாட்டு வீரர் மற்றும் எழுத்தாளர் லயன் டாக்டர் எம் ஆர் சவுந்தரராஜன் இருவரும் அரிமா சேவைப் பணியில் தம்மை இணைத்து கொண்டார்கள்.
ஆயுஷ் அரிமா அமைப்பினர் பல ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வந்ததோடு மட்டுமல்லாமல் பல சமூக நலன்கள் சார்ந்த வழிகாட்டுதல்களையும் செய்து வருகிறார்கள். அதோடு உணவே மருந்து போன்ற மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தொடர்ந்து இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் முகாம்களின் மூலம் பெரும்பாலான மக்களுக்கு பயனுள்ள வகையில் சேவை செய்து வருகிறார்கள்.