சர்வதேச அளவில் 108 விருதுகளை வென்று, பலரது கவனத்தையும் ஈர்த்த ‘கழிப்பறை’ என்ற ஆவணப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் முழு நீள திரைப்படமாகிறது.
பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் வம்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமித் குமார், ஹிெஜெய்,பிரபு, தனலட்சுமி,திவ்யா வீரமணி, ஆர்.சுபஸ்ரீ மற்றும் ஜனகன் ஆகியோர் கதையின் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”கழிப்பறை வசதி இல்லாமல் திறந்த வெளியை பயன்படுத்தி வாழ்கிறார்கள் மலை கிராம மக்கள். விஷப் பூச்சிகளாலும், பலவகை நோய்களாலும், சில ஆண்களாலும் பாதிக்கப்பட்டு வேதனை அடைகிறார்கள் பெண்கள். கழிப்பறை இல்லாததால் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கவும் செய்கிறார்கள். அதையடுத்து கழிப்பறையின் முக்கியத்துவத்தை அறிந்த பெண்கள் ஒரு ஆண் துணையுடன் தங்கள் மானம் காக்கவும் உரிமைக்காகவும் கழிப்பறை வேண்டும் என்று போராட்டத்தை தொடங்குகிறார்கள். அதன் விளைவுகள் என்ன என்பதே கதை. சமூக விழிப்புணர்வு கொண்ட இந்த சப்ஜெக்ட் காமெடி சென்டிமென்ட் ஆக்ஷனுடன் உருவாகிறது” என்றார்.
படக்குழு:-
கதை திரைக்கதை வசனம் இயக்கம் -ஜிஜு
தயாரிப்பு – வன்ஷிகா மக்கர் பிலிம்ஸ் பிரீத்தி அமித்குமார்
ஒளிப்பதிவு – பாலமுருகன்
இசை – ஸ்ரீ காந்தன்
பாடல்கள் -ஜிஜு(தமிழ், ராஜேஷ் கோபிசெட்டி (இந்தி / தெலுங்கு , சுவாதி ஷர்மா (இந்தி
சண்டைப் பயிற்சி – மதுரா
எடிட்டிங் – ஆனந்த கிருஷ்ணன்
மக்கள் தொடர்பு – வெங்கட்