Home சினிமா உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிப்பில் கழுகு சத்யசிவா இயக்கும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன்...

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிப்பில் கழுகு சத்யசிவா இயக்கும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது! 

கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன் – நாயகியாக இணையும்அறிவு படத்தின், படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தில் ஐ எம் விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான  சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர்.
படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக எஸ் கே, கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு எம் பணியாற்றுகின்றனர். இணை தயாரிப்பாளர்  சாய்பிரபு ஜெயக்குமார்.
படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இயற்கை அழகும், நகர வாழ்க்கையின் நிஜங்களும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சமூகப் பொறுப்புணர்வும், விறுவிறுப்பும் இணையும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்