Home பொது ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவக்கம்!

ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவக்கம்!

மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் துவங்குகிறது. ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய முயற்சியில் களம் இறங்குகிறார் தயாரிப்பாளர் ஆர்.ராகேஷ்.
இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷன்  நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ள இவர், கபாலி , காலா , பைசன் போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவின் உள்ளார்ந்த படைப்புத் தன்மையையும், தரமான உள்ளடக்கத்தின் அவசியத்தையும் நன்கு புரிந்துள்ள ஆர். ராகேஷ் தற்போது தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை மிகப்பெரிய கனவுகளுடன் தொடங்கியுள்ளார்,
இயல்பான நடிப்பாலும், கதைத்தேர்விலும் தனித்துவத்தை நிரூபித்துள்ள மணிகண்டன், தொடர்ந்து தரமான வெற்றி திரைப்படங்களை வழங்கி வரும் நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட் நைட் , குடும்பஸ்தான்,போன்ற வெற்றி படங்களின் வரிசையில் இணையும் வகையில், இந்த திரைப்படமும் உணர்வுகள், வலுவான கதைக்களம், நவீன திரைக்கதை மற்றும் மாபெரும் திரை அனுபவத்துடன் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தலைமுறை திரைப்படங்களில், இந்த படம் மேலும் ஒரு முக்கியமான மற்றும் பேசப்படும் படைப்பாக மாறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகிலும் ரசிகர்களிடையும் அதிகரித்துள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக தொடங்க உள்ள நிலையில், இயக்குனர், நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்