Home பொது ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா… கோவை ரத்தினம் கல்லூரியில் 4000 மாணவ –...

‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா… கோவை ரத்தினம் கல்லூரியில் 4000 மாணவ – மாணவிகள் முன்னிலையில் உற்சாகம்!

மகிழ் புரொடக்சன்ஸ் பியூலா மகிழ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு.’ தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
​முன்னதாக இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
​இதன் தொடர்ச்சியாக, கோவையில் உள்ள பிரபல ரத்தினம் கல்லூரியில் இப்படத்தின் பிரம்மாண்ட ப்ரொமோஷன் விழா நடைபெற்றது. சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதன் மத்தியில் 3rd look போஸ்டரை வெளியிட்டனர்.
​இந்நிகழ்ச்சியில் படக்குழுவைச் சேர்ந்த நடிகர் தக்க்ஷன் விஜய் மற்றும் வாழை ஜானகி அம்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர். படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், தங்களது திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
​விழாவின் மிக முக்கிய சிறப்பம்சமாக திரையிடப்பட்ட இப்படத்தின் டீசர், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசர் மீது கொண்ட அதீத ஈர்ப்பால், அதனை Repeat Mode யில் மீண்டும் ஒளிபரப்பச் சொல்லி  மாணவ மாணவியர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்
மாணவிகளின் உற்சாகத்திற்கு மதிப்பளித்து, டீசர் மீண்டும் திரையிடப்பட்டு கொண்டாடபட்டது.
​மாணவர்களின் இந்த பேராதரவும், கல்லூரியின் எழுச்சியான வரவேற்பும் ‘துரோகம் பழகு’ படத்தின் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்திருக்கிறது. இப்படம் மிக விரைவில் திரைக்கு வரவிருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்