சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா 12 ஜூலை 2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திரு.K.நடராஜன் அவர்கள் தலைமையில்நடைபெற்ற இவ்விழாவில் ஆசிரியர் டாக்டர் S.மைக்கிள் ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்க, பதிப்பாசிரியர் டாக்டர் A.ராஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் திருமதி.M.சிறில் தேவி அரசி, திருமதி N.ஜூலியட் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். மதிப்பிற்குரிய நீதியரசர் திரு.P.கணேசன் (ஓய்வு) அவர்கள், திரு.A.G. மௌரியா, IPS அவர்கள் மற்றும் திரு.G.கார்த்திக் அவர்கள் (Managing Director, Gee Kay Human Resource Pvt. Ltd.), திரு.V.K.ராம்குமார் MLA, Dr.A.அமீர்கான்., தேசிய பொது செயலாளர்
ஐ.என்.டி.யூ.சி., Dr.ஹிம்மத் அஹ்மத் ஹுஸைன் அவர்கள் ., திரு. ரமேஷ் விஸ்வநாதன் தலைவர்UAE தமிழ்ச்சங்கம் ., திரு. A. அண்ணாமலை தலைவர் NICA.,திரு. Dr.S.ரமணன் .,திரு.S.ரஞ்சித் பெர்னாண்டோ, திரு.A.V.ராஜ்குமார்,திரு.S.சாமுவேல் செல்வராஜ்,திரு.H.M.கனி, திரு.V.யுவராஜ், திரு.P.C.கார்த்திக் குமார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் ஒருங்கிணைப்பாளர் செல்வி M.பவிஷியா HR மற்றும் ஒருங்கிணைப்பு குழுவினர்கள் திரு. தமிழ்பத்மநாபன்,திரு. A.டேனியல் இருதயராஜ்,திரு.A.பாஸ்கரன்,திரு.A.ஜமால் முகமது,திரு.H.மேதீன் பாஷா, திரு.S.மணி,திரு.K. ஸ்ரீஜிஸ் மற்றும் திருமதி U.லெட்சுமி அவர்கள் சிறப்புடன் செயல்பட இவ்விழாவில் செல்வி.க.வே.அத்வைதாவிற்கு நாட்டிய மஞ்சரி என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில் சிறந்த பத்திரிகையாளர் விருது திரு.S.மைக்கிள் ராஜூ, டாக்டர் M.சார்லஸ் ஆரோக்கியராஜ் , செல்வி.M.பவிஷியா, ஆகியோருக்கு வழங்கப்பட்டது. காவலர் மக்கள் செய்தி நிருபர்கள் அத்தனை பேருக்கும் நற்சான்றிதழ், விருது, சால்வை, டிராவல் பேக் ஆகியன வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் திரு.A.டேனியல் இருதயராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். திரு.A.S.மனோஜ் குமார் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

