குமரி மாவட்டத்துல செம மாஸான கபடி பிளேயரா இருக்காரு லிங்கம் (கதிர்). போலீஸ் வேலையில செட்டில் ஆகணும்னு உசுர கொடுத்து கனவு காண்கிறாரு. ஆனா, எதிர்பாராத விதமா ஒரு கபடி மேட்ச்ல நடக்குற தகராறுல, செய்யாத கொலை பழி இவரு தலைல விழுது. உள்ள போயிட்டு வெளிய வர்ற லிங்கத்தோட லைஃப் டோட்டலா தலைகீழா மாறுது. பழிவாங்குற படலம், துரோகம், பொலிட்டிக்கல் மேட்டர்னு லிங்கம் எப்படி ஊரையே கதிகலங்க வர்ற ரவுடியா மாறினாரு, என்னென்னா சம்பவங்களைச் செய்றாருங்கிறதுதான் 8 எபிசோடுகள்ல ஓடி முடியிற கதை.
கபடி பிளேயரா இருந்து ரவுடியா மாறுற அந்த கேரக்டர் டிரான்சிஷனை கதைநாயகன் கதிர் பின்னி பெடல் எடுத்திருக்காரு. போலீஸ் ஆகணும்னு துடிக்கிற அப்பாவியான இளைஞனா ஆரம்பிச்சு, பழிக்குப் பழி வாங்குற கேங்ஸ்டரா அவர் காட்டுற எமோஷன்ஸ் எல்லாமே செம நேச்சுரலா இருக்கு.
திவ்யபாரதி, பூர்ணிமா ரவி ரெண்டு பேரும்தான் சீரிஸோட மெயின் ஸ்ட்ரென்த். கதையில வர ரொமான்ஸ் அண்ட் எமோஷனல் சீன்களை பக்காவா பண்ணியிருக்காங்க.
போஸ் வெங்கட் அவரோட அனுபவ நடிப்பை இந்த சீரிஸ்ல கச்சிதமா காட்டியிருக்காரு.
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் டைரக்ஷன்ல 80-கள், 90-களோட சீனை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்திருக்காங்க. ஆரம்பத்துல கதை கொஞ்சம் மெதுவா நகர்ந்தாலும், அடுத்தடுத்த எபிசோடுகள்ல கதையை விறுவிறுப்பா கொண்டு போயிருக்காங்க.
ஒளிப்பதிவுல 1987 முதல் 1996 வரையிலான அந்த டார்க்கான கேங்ஸ்டர் உலகத்த கேமராவுல பக்காவா கொண்டு வந்திருக்காங்க. அந்தந்த சீனுக்கு ஏத்த மாதிரி பின்னணி இசையும் மிரட்டலா இருக்கு.
ஆக்ஷன் சீன்லாம் நம்ம ஊர் சண்டைகள் எப்படி இருக்குமோ அப்படி எதார்த்தமா செஞ்சிருக்காங்க.
ஒட்டுமொத்தத்துல பார்க்கும்போது, வன்முறை, எமோஷன், பழிவாங்குற ஆசை இதெல்லாம் கலந்து இந்த வீக்கெண்டுக்கு ஒரு தரமான வெப் சீரிஸ் பாக்கணும்னு நினைச்சா, தாராளமா இந்த லிங்கத்த ட்ரை பண்ணலாம்.

