Home Uncategorized ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

ஜெய்ப்பூர் ஹோட்டல்ல வேலை செய்யுற சனந்த்துக்கும், ஐடி கம்பெனியில இருக்குற தமிழ் பொண்ணு இமயாவுக்கும் முதல்ல பிரண்ட்ஷிப் ஆகுது. அப்புறம் சனந்த் மேல இமயாவுக்கு லவ் வந்துடுது. ஆனா, சனந்த் தன் ஃபர்ஸ்ட் லவ் பிரேக்-அப் ஆன வலியால, அந்த வேதனையைத் தாங்குற சக்தி எனக்கு இல்லைன்னு சொல்லி முதல்ல நோ சொல்றான். அப்புறம் சனத்தோட பழைய கதையைத் தெரிஞ்சுகிட்ட பிறகும் இமயா அவனையே உருகி உருகி லவ் பண்ண, ஒரு வழியா சனத்தும் ஓகே சொல்லி ஜாலியா லைஃப்பை ஸ்டார்ட் பண்றான்.
ஆனா பேட் டைம், ஒரு விபத்துல சனந்த்துக்கு மண்டையில பலமா அடிபட்டு 6 வருஷ ஞாபகம் அவுட் ஆயிடுது. இதனால இமயாவையும் அவ லவ்வையும் டோட்டலா மறந்துட்டு, பழைய நினைப்போட தன் எக்ஸ்-லவ்வர் மடோனா செபாஸ்டியன தேடிப் போறான். கடைசியில இமயாவோட லவ் ஜெயிச்சதா, இல்ல பழைய லவ் ஜெயிச்சதான்றது தான் மீதிக் கதை.
ஹீரோ சனந்த் சும்மா டூயட், ரொமான்ஸ்னு சுத்தாம, கதைய புரிஞ்சு கேரக்டரா வாழ்ந்திருக்கார். லவ் பெயிலியர் சோகம், அப்புறம் இமயா வந்ததும் வர்ற ஜாலின்னு நடிப்பை செமையா ஸ்கோர் பண்ணியிருக்கார். புது நடிகை இமயா, ஃபர்ஸ்ட் படம் மாதிரியே தெரியாம செம தைரியமாவும் கான்பிடென்ட்டாவும் நடிச்சு படத்துக்கு பெரிய பலம் சேர்த்திருக்காங்க. மடோனா செபாஸ்டியனும் காதல்ல நேர்மையா இருக்க முடியலையேன்னு ஃபீல் பண்ற சீன்லயும், ரிஜெக்ட் பண்ண லவ் தேடி வரும்போது தடுமாறுற சீன்லயும் செம எதார்த்தமா நடிச்சு அட்டகாசம் பண்ணியிருக்காங்க.
படத்துல ஹீரோவுக்கு பிரண்டா வர்ற வாட்ஸ் அப் மணி, சும்மா ஏனோ தானோன்னு இல்லாம குணச்சித்திர ரோல்ல செமையா நடிச்சிருக்காரு. கேரக்டரோட வெயிட்டையும் தாங்கி, அதே நேரத்துல லோக்கல் காமெடி நக்கலையும் மிக்ஸ் பண்ணி சில சீன்ல ஆடியன்ஸ நல்லாவே சிரிக்க வச்சிருக்காரு. அவரோட ஒய்ஃபா நடிச்சிருக்க டெப்னிதாவுக்கு என்ன வேலை கொடுத்தாங்களோ, அதை கச்சிதமா, பர்ஃபெக்ட்டா செஞ்சுட்டு போயிருக்காங்க.

ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன் ஜெய்ப்பூர், ஊட்டிய செம அழகா காட்டி கண்ணுக்கு விருந்து வச்சிருக்காரு. ராஜேஷ் முருகேசனோட மியூசிக்ல பாட்டெல்லாம் திரும்ப திரும்ப கேக்குற மாதிரி மெலோடியா இருக்கு, பிஜிஎம்மும் அளவா கச்சிதமா இருக்கு.

ஆனா கதையில தான் கொஞ்சம் மேட்டர் வீக். மெமரி லாஸ் ஆகுறதும் அதனால வர்ற பஞ்சாயத்துமே மெயின் கதையா இருக்கறதால, லவ்வர்ஸோட ஃபீலிங்ஸும் வலியும் எந்த சீன்லயும் பெருசா ஒட்டல.
படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் டைரக்டர் சொன்னத மட்டும் அப்படியே கட் பண்ணி வச்சிருக்காரு. டைரக்டர் கிஷோர் குமார் லவ் ஸ்டோரிய வச்சு ஆடியன்ஸ ஃபீல் பண்ண வைக்காம, மெமரி லாஸ் ஆன ஹீரோவோட காதல காமெடி டிராக்கா மாத்தி என்டர்டெய்ன் பண்ண ட்ரை பண்ணிருக்காரு.
ஞாபக மறதி பேக்கிரவுண்ட்ல லவ்வ சொல்ல நினைச்சது ஆடியன்ஸ் மனசுல பெருசா இம்பாக்ட் பண்ணல. முன்னாள் காதலி, இந்நாள் காதலினு ஒரே நேரத்துல ரெண்டு பேரோட டிராவல் பண்ற ஹீரோ, கடைசில யார் கூட சேருவான்ற கேள்வி தான் படத்த கொஞ்சம் சுவாரஸ்யமா நகர்த்துது. ஆனா, அந்த மூணு மெயின் கேரக்டர்ஸோட கெமிஸ்ட்ரில டைரக்டர் இன்னும் கொஞ்சம் போக்கஸ் பண்ணிருந்தா, தமிழ் சினிமால இந்த லவ் படமும் ஒரு ரவுண்டு வந்திருக்கும்.
மொத்தத்துல, இந்த ‘ஹார்ட்டின்’ படம் டைம்பாஸ் பண்றதுக்கு ஓகே தான், ஆனா மனச தொடல பாஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்