Home விமர்சனம் ஜெயிலர் 2 சினிமா விமர்சனம்

ஜெயிலர் 2 சினிமா விமர்சனம்

தலைவரு நிரந்தரம்; மீண்டும் நிரூபணம் ‘ஜெயிலர் 2.’

முத்துவேல் பாண்டியன் கொடூர வில்லன் வர்மனைக் கொன்று, தங்கப் பதக்கம் சிவாஜி போல் சொந்த மகனை துப்பாக்கியால் சுட்டதோடு நிறைவுக்கு வந்தது ஜெயிலர். இந்த இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் வர்மன் எச்சரித்தது போல சர்வதேச அளவில் பரந்து விரிந்திருக்கும் உலகமகா குற்றப் பின்னணி கொண்ட சிண்டிகேட் தரப்பு முத்துவேல் பாண்டியனை சீண்டுகிறது. அதனால் முத்துவேல் பாண்டியனுக்கு தன் பலம் என்ன என்பதைக் காட்ட வேண்டிய கட்டாயம்.

காட்டுகிறார். எப்படியெல்லாம் காட்டுகிறார் என்பதை நெல்சனின் திரைக்கதையில் பார்க்கும்போது ஆடியன்ஸிடம் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது…

முத்துவேல் பாண்டியனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘வயசானாலும் ஸ்டைலும் கம்பீரமும் குறையல’ என்பதை இன்னும் பல வருடங்களுக்கு சொல்லலாம். அப்படியொரு ஸ்டைலில் அதகளம் செய்பவரின் அன்டர்கவர் மைன்ட் கேம் சம்பவங்கள் அத்தனையும் பட்டாசு.

வழக்கமான வில்லத்தனத்தை கொஞ்சம் மெருகேற்றித் தந்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. சூப்பர் ஸ்டாருக்கு இணையான ஸ்கிரீன் பிரசன்ஸ் இந்த மிரட்டல் ஸ்டாருக்கும் இருக்கிறது.

வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு இருவரின் வில்லத்தனத்திற்கு ஸ்க்ரீன்பிளே தந்திருக்கும் இடம் தாராளம்.

மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் என கடந்த பாக கேமியோக்களின் அட்டனன்ஸோடு ஹிர்த்திக் ரோஷன் இணைந்து கெத்து காட்டுகிறார். மின்னல் போல் வந்து போகிறார் விஜய் சேதுபதி.

போன பாகத்தில் சில காட்சிகளில் வந்த யோகிபாபு இந்த பாகத்தில் கூடுதல் காட்சிகளில் எட்டிப் பார்த்து ரெகுலரான தெனாவட்டுப் பேச்சில் கலகலப்பூட்டுகிறார். நமோ நாராயணனுக்கு காமெடியில் கலக்க நல்ல வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உள்ளிட்ட இன்னபிறர் கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார்கள்.

ராக் ஸ்டார் அனிருத்தின் பிஜிஎம்மில் ஆர்ப்பாட்டம் தூக்கல். அது சூப்பர் ஸ்டாரின் ஸ்லோ மோஷன் காட்சிகளை வேறு லெவலுக்கு உயர்த்தியிருக்கிறது. ‘ஹுக்கூம்’ ரீலோடட் தீம் மியூசிக் வரும்போதெல்லாம் தியேட்டரில் ரசிகர்களின் உற்சாகம் எக்கச்சக்கம்.

பூர்ணா எனர்ஜியை எக்குத்தப்பாக எகிற விட்டிருக்கும் ‘அலபொலேலே’, நோரா ஃபதேஹி இடுப்பை வளைத்து நெளித்து ஆட்டம் போட்டிருக்கும் ‘பிந்தாஸ்’ பாடல்கள் பக்கா வைஃப் மெட்டீரியல். ‘ஒன் சன் ஒன் மூன்’ இன்னும் கொஞ்சம் அசத்தலாக இருந்திருக்கலாம்.

விஜய் கார்த்திக் கண்ணனின் செம ஸ்டைலிஷான ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகளை பதிவு செய்திருக்கும் விதம் படத்திற்கு பல மடங்கு மைலேஜ் தருகிறது.

சேத்தன் டிஸோவ்ஸாவின் ஆக்ஷன் கோரியோகிராபி வெறித்தனம். ரத்தச்சகதி முதல் பாகத்தைவிட பல மடங்கு ஜாஸ்தி.

சீரியஸ் எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவு சிரிப்புக்கும் பஞ்சமில்லாத முன்பாதி படத்தின் பலம். நெல்சன் ஸ்டைல் திரைக்கதையில் மெல்லமாக நகர்கிற, முதல் பாகத்தின் தாக்கத்திலிருந்து விடுபடாத சில காட்சிகள் படத்தின் பலவீனம். எது எப்படியிருந்தாலும் ‘தலைவர்’ ரசிகர்களுக்கு மாஸான விருந்துதான்!

ஜெயிலர் 2 – அதிரி புதிரி ஹிட்டு!

-சு. கணேஷ்குமார்

 

 

REVIEW OVERVIEW
ஜெயிலர் 2 சினிமா விமர்சனம்
Previous articleசூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!
jailer-2-movie-reviewதலைவரு நிரந்தரம்; மீண்டும் நிரூபணம் 'ஜெயிலர் 2.' முத்துவேல் பாண்டியன் கொடூர வில்லன் வர்மனைக் கொன்று, தங்கப் பதக்கம் சிவாஜி போல் சொந்த மகனை துப்பாக்கியால் சுட்டதோடு நிறைவுக்கு வந்தது ஜெயிலர். இந்த இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் வர்மன் எச்சரித்தது போல சர்வதேச அளவில் பரந்து விரிந்திருக்கும் உலகமகா குற்றப் பின்னணி கொண்ட சிண்டிகேட் தரப்பு முத்துவேல் பாண்டியனை சீண்டுகிறது. அதனால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்