விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பது கல்பனாவின் கனவு, லட்சியம். அதை நிறைவேற்ற அவளது கணவன் கிருஷ்ணா முழு ஒத்துழைப்பு தர, கல்பனா ராக்கெட் உருவாக்கும் சவாலான போட்டியில் கலந்து கொள்கிறாள்.
அதில் அவள் சந்திக்கும் பிரச்சனைகள் பரபரப்பாக கடந்தோட, ஒரு கட்டத்தில் அவளது கனவு நனவாகிறது. அதை உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சிப் பெருக்கோடும் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் பவன் சாதினேனி
சாலை வசதிகள்கூட இல்லாத பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து, விண்வெளியைத் தொட ஆசைப்படும் பெண் கேரக்டருக்கு சாத்விகா வீரவல்லி நல்ல தேர்வு. கனவுகளைச் சுமந்து நாட்களைக் கடத்துவது, கனவை நனவாக்கிக் கொள்ள 100% போராடுவது, கணவருடன் நெருக்கம் உருக்கம் என புகுந்து புறப்படும் அவரது நடிப்பு அப்ளாஸ் பெறுகிறது.
‘நீ படிக்கிற வேலைய மட்டும் பாரு, உனக்காக நான் இருக்கிறேன்’ என்று சொல்லி மனைவியை ஊக்கப்படுத்தும் கணவன் கிருஷ்ணாவாக துல்கர் சல்மானின் நடிப்பு பெண்களின் மனதைக் கொள்ளையடிக்கும்.
கதையோட்டத்தின் கனமான தருணங்களை பலமாக்கும் பணியை பக்காவாகச் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
ருஹானி ஷர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், நாசர், முரளி ஷர்மா, ஸ்வாசிகா, கோட்டா ஜெயராம், மானசி சுதிர், சின்னி ஜெயந்த், பிரவீன், காசி ரெட்டி, சைதன்யா ஜொன்னலகட்டா, வாசு இன்டூரி ஏராளமான நடிகர் நடிகைகள் நடிப்பு நேர்த்தி.
உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு பின்னணி இசையால் உயிர் கொடுத்துள்ளார் ஜி வி பிரகாஷ். பாடல்கள் பரவாயில்லை ரகம்.

