Home பொது ஓ எம் சினிமா விமர்சனம்

ஓ எம் சினிமா விமர்சனம்

காடு தீ பிடித்தது போன்ற பரபரப்பில் நகரும் கதை, திரைக்கதையில் ‘ஓ எம்.’

திருவண்ணாமலை சேஷாச்சலம் வனப்பகுதிகளில் தொடர்ச்சியாக செம்மரம் கடத்தும் கும்பலை அடக்கி ஒடுக்க சிறப்பு அதிரடிப்படை ‘ஆபரேஷன் மோல்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகிறது. அதற்கு பொறுப்பேற்கும் அதிகாரி பழனிவேல் கடத்தல் கும்பலுக்குள் ரகசிய நுழைவதும், செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை எப்படி மீட்கிறார் என்பதுமே ‘ஓ எம்.’

பழனிவேலாக தனுஷ். நடிப்பு அசுரன் என்பதை மீண்டும் ஓருமுறை நிரூபிப்பதற்கான வாய்ப்பு. உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் அனல் பறக்கும் ஆக்ஷனிலும் வழக்கம்போல் வழங்கியிருப்பது தரமான பங்களிப்பு.

தோற்றத்தில் வித்தியாசம், ஐ.பி.எஸ் அதிகாரியாக கம்பீரம் என ஆளுமையாக சாய் பல்லவி, செம்மரக் கடத்தல் மன்னனாக கெத்து காட்டும் மம்முட்டி இன்னபிற கேரக்டர்களில் ஸ்ரீலீலா, நஸ்ருதீன்ஷா, இந்திரன்ஸ், தீனா, லல்லு உள்ளிட்டோரின் நடிப்பு பெரும் பலம்.

கரடுமுரடான வனப்பகுதி, சுனாமி சுழன்றடிப்பது போன்ற ஆக்சன் அதகளம் என விறுவிறுப்பின் உச்சமான காட்சிகளை எழிலரசுவின் கேமரா கோணங்களில் பார்ப்பதும் சர்வதேச ஆக்சன் கோரியோகிராபர்கள் யானிக் பென் – கெச்சா கம்பாக்டி கூட்டணியின் சண்டைக் காட்சிகளும் கூஸ்பம்ஸ் மொமண்ட்.

அபயங்கரின் இசையில் அல்ரெடி ஹிட்டடித்த ‘ஆல்டைம் அன்பாருக்கும் என் தங்கமே’, பாடலும் ‘பட்டாகத்தி தப்பமாட்ட’ பாடலும் நிச்சயமாய் வைப் மெட்டீரியல்ஸ். படத்தின் மைலேஜை அதிகரிக்கிறது பின்னணி இசை.

‘அமரன்’ தந்த ராஜ்குமார் பெரியசாமி சென்ஸிடிவான பிரச்சனையை மாஸான திரைக்கதையில் போட்டுப்புரட்டியதில் ரசிகர்களுக்கு மாஸான தியேட்ரிகல் எக்ஸ்பீரியன்ஸ் உறுதியாகியிருக்கிறது. படம் தனுஷின் ஹிட் பட வரிசையில் சேர்கிறது!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்