Home சினிமா தனி ஹீரோவாக ‘ஜெய்பீம்’ மணிகண்டன்! உருவானது குறட்டையை மையமாக கொண்ட நகைச்சுவை திரைப்படம்!

தனி ஹீரோவாக ‘ஜெய்பீம்’ மணிகண்டன்! உருவானது குறட்டையை மையமாக கொண்ட நகைச்சுவை திரைப்படம்!

‘விக்ரம் வேதா’, ‘காலா’, ‘சில்லுக்கருப்பட்டி’, ‘ஜெய் பீம்’, ‘ஏலே’ உள்ளிட்ட பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ‘குறட்டை’ பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார்.

சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது பட பெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படக்குழு:-

ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்திருக்கின்றனர்.

படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசராக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.

படத்தின் ஸ்டில்ஸ்:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்