இ.சிவபிரகாஷ் எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் ‘பாண்டிய வம்சம்.’
ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக இ.சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம் பி ஆனந்த் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் நாயகியாக ரக்ஷிதா, ஆலியா ஹயாத் நடித்துள்ளனர். வில்லனாக மனோஜ் குமார் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார், போஸ் வெங்கட், குட்டிப் புலி சரவணன் சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பசும்பொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் . பி. வி. கதிரவன் வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குநரரிடம் கேட்டோம்… “கிராமத்திலுள்ள அரசியலை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டுமல்லாது சமுதாயத்துக்கு தேவையான சில முக்கிய விஷயங்களையும் பதிவு செய்துள்ளோம்” என்றார்.
படம் பற்றி இயக்குநரரிடம் கேட்டோம்… “கிராமத்திலுள்ள அரசியலை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டுமல்லாது சமுதாயத்துக்கு தேவையான சில முக்கிய விஷயங்களையும் பதிவு செய்துள்ளோம்” என்றார்.படக்குழு:- இசை – ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு – கண்ணதாசன் செழியன், படத்தொகுப்பு – மாதவன்
‘பாண்டிய வம்சம்’ படத்தின் ஸ்டில்ஸ்


