மார்ச் 30-ம் தேதி ராம நவமி விழா தினத்திலிருந்து ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரச்சார பாணியிலான விளம்பர நிகழ்வு தொடங்குகிறது. இதற்காக படக்குழுவினர் மாதா வைஷ்ணவி தேவியிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக ஆலயத்திற்கு சென்றனர்.
இந்த உலகத்தின் தொடக்கம் மற்றும் பிரபஞ்சத்தின் உருவாக்கம் மாதா ஸ்ரீ துர்காவின் அருளால் தான் என்பதை குறிப்பிடும் விழா சைத்ர நவராத்திரி. இந்து கலாச்சாரத்தில் மகத்தான முக்கியத்தை கொண்டிருக்கும் இந்த விழா நிகழ்வு, வைஷ்ணவி தேவியின் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த தேவி மீது அபார நம்பிக்கை கொண்டிருக்கும் தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் படக்குழுவினர், அவர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆதி புருஷ்’ படத்தின் வெற்றிக்காக ஆசீர்வாதம் பெறும் வகையில் அங்கு சென்றனர்.
இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ‘ஆதி புருஷ்’ படமும் ஒன்று. நன்மை – தீமை இவற்றுக்கு இடையேயான போராட்டத்தில் நன்மை வெற்றி பெறும். இதனை முன்னெடுத்து தயாராகியிருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்திற்கு மாதா வைஷ்ணவியின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என பட குழுவினர் தெரிவித்தனர்.