பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்திற்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமம் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டது. 1970களில் ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் எனும் திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த படத்தில் டைகர் நாகேஸ்வரராவ் எனும் கதாபாத்திரத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.
இந்த படம் அக்டோபர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா டைகர் நாகேஸ்வரராவின் கெட்டப்பில் நீராவி ரயில் மீது நின்றிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.தசரா விடுமுறையின் போது இந்த படம் வெளியாவதால் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.