Home சினிமா பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் இசை… ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் பா...

பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் இசை… ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் பா விஜய் இயக்கிய ‘அகத்தியா’ படத்தின் டைட்டில் லோகோ வீடியோ!

ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன் பிரபல திரைப் பாடலாசிரியர் பா விஜய் இயக்கியுள்ள படம் ‘அகத்தியா.’

அதிநவீன சிஜி பங்களிப்புடன், இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், புதுமையான உலகமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் லோகோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் இசை என அந்த வீடியோ ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. நான்கு மொழிகளில் அற்புதமான சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு மர்மமான புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், அனீஷ் அர்ஜுன் தேவின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சாரப் பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கப்போகும் இந்த படம் வரும் 2025 ஜனவரி 31-ம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

படம் குறித்து பேசிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், “திகில் த்ரில்லர் ஜானர் நாடு முழுவதுமுள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, இந்த படம் மூலம் அந்த அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரமாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். ‘அகத்தியா’ கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்” என்றார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்