‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘அஜினோமோட்டோ.‘ அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கியிருக்கும் இந்த படத்தில், கதாநாயகியாக காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். மற்ற பாத்திரங்களில் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஆ. தமிழ் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. எம். உதயகுமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எம். எஸ். ஸ்ரீநாத் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அஜினோமோட்டோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெறும் நாயகனின் தோற்றமும், இணையத்தில் வெளியாகி இருக்கும் மோஷன் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும், மோஷன் போஸ்டருக்கும் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

படத்தை பற்றி இயக்குநரிடம் பேசியபோது, ” ‘அஜினோமோட்டோ’ என்பது சுவையை அதிகரிக்கக்கூடியது. ஆனால் அது மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம். இதனை மையப்படுத்தி ‘அஜினோமோட்டோ’ படத்தின் கதை தயாராகியிருக்கிறது. கதையில் நடைபெறும் சில சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு, அந்த சமயத்தில் நல்லதாகத் தோன்றும். ஆனால் பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதன் பின் விளைவுகளும் கடுமையாக இருக்கும். அது என்ன? என்பதை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே இப்படத்தின் திரைக்கதை. மேலும் இது போன்ற அனுபவங்களை, கழுகு கண் பார்வையுடனான திரைக்கதையாக விவரிக்கும் போது, பார்வையாளர்களுக்கு புது வகையான அனுபவம் கிடைக்கும்” என்றார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here