Home சினிமா ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்! சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக ‘எமகாதகி.’

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்! சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக ‘எமகாதகி.’

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ‘எமகாதகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை, திரைத்துறையில் கலையை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் சொன்ன கதையைக் கேட்ட நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான படத்தை தரும் எண்ணத்தில், இப்படத்தை தயாரித்துள்ளனர்.

புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், R.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளது.

நைசாட் மீடியா ஒர்க்ஸ் & சாரங் பிரதர்ஸ் புரடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்

தொழில் நுட்பக்குழு:-

ஒளிப்பதிவு – சுஜித் சாரங்
எடிட்டர் & கலரிஸ்ட் – ஸ்ரீஜித் சாரங்
இசை – ஜெசின் ஜார்ஜ்
கலை – ஜோசப் பாபின்
சவுண்ட் டிசைன் – Sync Cinema
சவுண்ட் மிக்ஸிங் – அரவிந்த் மேனன்
VFX. Paperplanevfx
ஸ்டண்ட் – முரளி G
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் (Sivadigitalart)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்