Home சினிமா அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!!

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!!

வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கி வரும் அசோக் செல்வன், தரமான நடிப்பைத் தரும் நடிகை நிமிஷா சஜயன் இணையும் படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்குகிறார். இந்த  படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள  பூஜையுடன் துவங்கியது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்  . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் 6 வது படைப்பாக இப்படம் உருவாகிறது.

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களைத் தந்து, முன்னணியில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நடிகர் தனுஷ் நடிப்பில், போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘D54’ மற்றும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படங்களைத் தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன் நடிக்கும் இந்த புதிய படத்தினை, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவன தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஹேப்பி எண்டிங், ஒன்ஸ்மோர்’ படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று துவங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் பணிகளை கையாள்கிறார்.

மற்ற விபரங்கள் விரைவில்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்