இந்த படம் இதுவரை திரையில் பார்த்திராத அதிரடி காட்சிகளுடன் முழுக்க முழுக்க ஆக்சன் விருந்தாக இருக்கும்! -‘அமரம்’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் அருள் கிருஷ்ணன்

ராஜன் தேஜேஸ்வர், ஐரா அகர்வால் நடிக்கும் படம் ‘அமரம்.’

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் அருள் கிருஷ்ணன். இவர் இயக்குநர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இப்படம் மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை.

இதுவரை திரையில் பார்த்திராத அதிரடி காட்சிகளுடன் முழுக்க முழுக்க ஆக்சன் விருந்தாக இந்த திரைப்படம் இருக்கும். மிராக்கிள் மைக்கேல் புதுவிதமான பாணியில் ஸ்டண்டை வடிவமைத்துள்ளார்.

கிளைமேக்ஸ் காட்சியில் பிரபல பாலிவுட் குழு உதவியுடன், முழுக்க ரியல் ஸ்டண்ட்ஸ் செய்திருக்கிறோம். தெலுங்கு சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் மிக்கி J மேயர் இப்படம் மூலம், தமிழுக்கு முதன்முறையாக அறிமுகமாகிறார். 4 பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும். 5000 அடி உயரத்தில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளோம். இப்படி இப்படத்திற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறோம். இப்படம் இதுவரை சொல்லப்படாத கிழக்கு காடு மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

படத்தில் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ. மேயர் இசையமைத்துள்ளார்.

வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய  ஆர் ஸ்ரீராமர் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பார்வையை இயக்குநரும், நடிகருமான சசிகுமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். தற்போது அது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here