‘அலா நின்னு சேரி’ என்ற தெலுங்குப் படத்தை, ‘விஷன் மூவி மேக்கர்ஸ்’ சாய் சுதாகர் சாய், ‘முதல் காதல் மரியாதை’ என்ற பெயரில் தமிழில் தயாரித்துள்ளார். தினேஷ் தேஜ் கதாநாயகனாகவும் ஹெப்பா பட்டேல், பாயல் ராதாகிருஷ்ணா கதாநாயகியகளாகவும் நடித்துள்ளார்கள்.
வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”எல்லோருக்கும் முதல் காதல் வருவது உண்டு. அதை நாம் காதலிக்கும் பெண்ணிடம் கூற தைரியம் வருவதில்லை. அப்படி காதலிக்கும் பெண்ணை கடைசிவரை காதலித்து கைப்பிடிப்போமா என்றும் தெரியவில்லை. காதலித்த பெண்ணை நாம் திருமணம் செய்து கொண்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு இல்லை தான்.
காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரின் தாயார் ஏற்பாடு செய்து விடுகிறார். இதை அறிந்த நாயகன் திருமண மண்டபத்திற்கு செல்கிறான். அங்கே புது மாப்பிள்ளை தாலியை கட்ட முற்படும்பொழுது அங்கிருந்து நாயகன் திரும்பி விடுகிறான். பின் நாயகன் துவண்டு விடாமல் தன் வாழ்க்கையின் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறான். கடைசியில் தன் காதலியை கரம் பிடித்தானா ? இல்லை லட்சியத்தை அடைந்தானா? என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
படக்குழு:-
தயாரிப்பு: சாய் சுதாகர்
கதை திரைக்கதை இயக்கம்: நரேஷ் சிவன்
வசனம்: சாய் ரமேஷ்
ஒளிப்பதிவு: ஆண்ட்ரூ பாபு
இசை: சுபாஷ் ஆனந்த்
பாடல்கள்: சந்திர போஸ்
சண்டைப் பயிற்சி: கிங் சாலமன்
எடிட்டிங்: கோத்தகிரி வெங்கடேஸ்வரா ராவ்
மக்கள் தொடர்பு: வெங்கட்