Home சினிமா ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு திருமணப் பரிசாக கார் வழங்கிய எம் ஆர்...

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு திருமணப் பரிசாக கார் வழங்கிய எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் மகேஷ் ராஜ் பசிலியான்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்தை தந்த, இயக்குநராக முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த, தற்போது ஹீரோவாகவும் மாறியிருக்கிற அபிஷன் ஜீவிந்த் வரும் அக்டோபர் 31-ம் தேதி, தன் காதலியை கரம்பிடிக்கிறார்.

அவருக்கு திருமணப் பரிசாக, குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில் தொடர் வெற்றிப்  படங்களை வழங்கி வரும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் மகேஷ் ராஜ் பசிலியான் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார். கார் வழங்கிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில்,  எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

அபிஷன் ஜீவிந்த் தற்போது,  Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில்,  ஒரு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்