அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது! 

அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் புதுமையான களத்தில் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகிறது.

அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி ஆகிய நால்வரைச் சுற்றித்தான் படத்தின் மொத்தக் கதையும் பின்னப்பட்டுள்ளது. சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் விரைவில்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here