அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் திரில்லாராக உருவெடுத்துள்ளது. கதைக்களத்திற்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார்.

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம் இது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here