Home சினிமா வேற்றுக்கிரக வாசிகளும் மனிதர்களும் மோதுகிற கதையில், ஆரி நடிப்பில் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ அறிவியல்...

வேற்றுக்கிரக வாசிகளும் மனிதர்களும் மோதுகிற கதையில், ஆரி நடிப்பில் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ அறிவியல் நகைச்சுவை விருந்து! தியேட்டருக்கு வரும் முன் கலர்ஸ் டிவி.யில் வரும் ஞாயிறன்று ஒளிபரப்பு!

நடிகர் ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.’அறிமுக இயக்குநர் யு. கவிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் கதைநாயகனுக்கு ஜோடியாக சாஸ்வி பாலா நடித்திருக்கிறார். இவர்களுடன் பக்ஸ் பகவதி பெருமாள், மொட்டை ராஜேந்திரன் , பிஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.கோலிவுட் திரையுலகில் இதுவரை கண்டிராத காட்சிகளில் மனிதர்களும் வேற்றுகிரக வாசிகளும் மோதுவது தான் கதைக்களம்.

ஏழ்மை நிலையில் வசித்துவரும் கதைநாயகனுக்கு வேற்று கிரகத்திலிருந்து சதுர வடிவிலான வினோதப் பொருள் ஒன்று கிடைக்கிறது. அதனால் அவருக்கு அதீத சக்தி உண்டாகிறது. இதன் மூலம் அவர் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் இந்த பூமிக்கும் நன்மை செய்தாரா? அல்லது வேற்றுக்கிரகவாசிகள் அதனை மீண்டும் கைப்பற்றுவதற்காக பூமிக்கு வந்தார்களா? என்பதே படத்தின் சுவாரசியமான கதை.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் டிரெய்லர் வெளியாகி லட்சக் கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது. நேரடி தொலைக்காட்சி வெளியீடு குறித்து நடிகர் ஆரி, ”முதலில் இப்படி ஒரு வித்தியாசமான கதைகளத்திற்கு நடிக்க என்னை தேர்வு செய்த இயக்குனர் யு.கவிராஜுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் இதுவரை நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இப்படத்தில் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வேற்றுகிரகவாசிகள் மற்றும் பிற அற்புதமான புதுமைகளைக் கொண்ட தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த சுவாரஸ்யமான அறிவியல் திரைக்கதையை வரும் ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பல அறிவியல் சார்ந்த விஷயங்களை தங்கள் கண் முன்னே நிஜ உலகில் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இயக்குநர் யு.கவிராஜ், “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், மக்கள் அனைவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வார இறுதியை பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை உண்டாக்கும் என நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்