‘ஆனந்தம் விளையாடும் வீடு’ சினிமா விமர்சனம்

ஆனந்தம் விளையாடும் வீடு’ சினிமா விமர்சனம்

அப்பா ஒண்ணு – அம்மா ரெண்டுன்னு அண்ணன் தம்பிங்க ஏழெட்டுப் பேரு. அவங்களுக்குள்ள அளவுகடந்த பாசப்பிணைப்பு, அதை பிரிக்க நினைச்சவங்களுக்கு கிளைமாக்ஸ்ல ஆப்பு… படத்தோட கதை அம்புட்டுத்தான்…

அந்த கதைய, திரும்புன பக்கமெல்லாம் நட்சத்திரங்க, அவங்க உடுத்துற உடுப்பெல்லாம் ரங்கோலிங்கனு ஸ்கிரீன் முழுக்க வீடு கட்டி அடிச்சிருக்கார் இயக்குநர் நந்தா பெரியசாமி.

கெளதம் கார்த்திக் கூட்டத்துல ஒருத்தராத்தான் தெரியுறாரு. அந்தளவுக்கு அடக்கி வாசிக்கிற நடிப்பு. அதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அவரு ஹீரோவாச்சே… சண்டை கிண்டை போடலைன்னா சாமிக்குத்தம் ஆகிடாது! அதுக்காகவே ஒண்ணு ரெண்டு சீன் இருக்கு. அதுல புள்ளாண்டான் புயலா சீறி புல்லரிக்க வெச்சிருக்காரு!

ஹீரோயின் ஷிவாத்மிகா (நடிகர், இயக்குநர், டாக்டர் ராஜசேகர் – நடிகை ஜீவிதா தம்பதியோட பொண்ணு) பார்க்கப் பார்க்க பிடிக்கிற முகம் அவங்களுக்கு. நடிக்கிறதுக்கு பெருசா வேலையில்ல. ஹீரோகூட போடுற அந்த குத்தாட்டம் அட்டகாசம்!

‘சித்தப்பு’ சரவணனோட அமைதியான ஆக்டிங் அசத்துது!

சேரன் வித் சென்டிமென்ட். அப்புறமென்ன நடிப்பெல்லாம் நாம எதிர்பாத்தபடிதான். ஏத்தமாவும் இல்லை; ஏமாத்தவுமில்ல!

கொழுந்தனுங்க கூட கூட்டணி போட்டுக்கிட்டு, வாச்சவன வார்த்தையால துவைச்சு துவம்சம் பண்ற வேலை மைனா சூசனுக்கு. அந்த அம்மணி நடிப்பு தனியா தெரியுது!

டேனியல் பாலாஜிக்கு கிராமத்தான் கெட்டப்பு, வில்லத்தனத்துல அதே பழைய செட்டப்பு!

கவிஞர் சினேகனுக்கு கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல். கட்டிப்பிடி வைத்தியமெல்லாம் பண்ணாம எட்ட நின்னு, வார்த்தைக்கு வலிக்காம நாலு வரி வசனம் பேசிட்டு போறாரு.

லொகேஷன், கேமரா, மியூஸிக் அதெல்லாம் கதைக்கேத்த கச்சிதம்.

கதை, திரைக்கதையெல்லாம் பழகிப் போனதுதான். ‘அதனாலென்ன? குடும்பமா பாக்கலாம்னா எங்களுக்கு ஓகேதான்’னு சொல்ற ஆசாமியா நீங்க. அப்படினா ஆனந்தம் விளையாடும் வீட்டுக்கு ஒரு எட்டு போய்ட்டு வாங்க.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here