இந்த படத்தில் நான் லீட் இல்லை, இயக்குநர் விஷாலும் அவர் டீமும் தான் லீட்; நான் ஒரு குட்டி பார்ட்! -‘பாம்’ பட விழாவில் நடிகர் அர்ஜூன் தாஸ் பேச்சு 

அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘பாம்.’

படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ் ”எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாப்பாத்திரம் தந்த விஷாலுக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. இருவரும் டீம்-ஓடு ஷூட்டில் கலந்துகொண்டு ஆதரவு தந்ததற்கு நன்றி. விஷால் – இமான் சார் தான் இசை என்றவுடன், அவர் படத்தைப் பார்த்துக்கொள்வார் என்று சொன்னேன். காளி வெங்கட் சார், அநீதி படத்தில் நடித்திருந்தாலும் அதில் ஒன்றாக நடிக்கவில்லை, ஆனால் இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நான் லீட் இல்லை, விஷால் அவர் டீம் தான் லீட். நான் ஒரு குட்டி பார்ட். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார், அவருடன் வேலை பார்த்தது சந்தோஷம். விஷால் கதை சொன்னவுடன் “நான் தான் பண்ணனுமா?” எனக் கேட்டேன். எல்லோரும் சொல்லியும் என்னை நம்பி தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி” என்றார்.

இயக்குநர் விஷால் வெங்கட் ”GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் பெரிய நன்றி. ஒரு ஐடியா மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது மிகப்பெரிய விஷயம், என்னை நம்பி இன்று வரை ஆதரவாக இருக்கிறார்கள் நன்றி. அர்ஜூன் தாஸுக்கு இந்தக் கதை சொன்னேன், அவர் என்னை நம்பியதற்கு நன்றி. கதை எழுதியது முதல் ஷிவாத்மிகா தான் என் மைண்டில் இருந்தார், சிறப்பாக நடித்து தந்ததற்கு நன்றி. காளிவெங்கட் சாரிடம் கதை சொன்ன போது அவர் நடிப்பாரா எனச் சந்தேகம் இருந்தது. படம் முழுக்க பிணமாக நடிக்க வேண்டும், மூச்சு விடக்கூடாது – ஆனால் அசத்தியிருக்கிறார். சிங்கம்புலி சாரை நிறையக் கஷ்டப்படுத்தியுள்ளோம், சகித்துக்கொண்டதற்கு நன்றி. நாசர் சார் என் படத்தில் ஒரு ஃப்ரேமிலாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன், அதே போல் தான் அபிராமி மேடமும். இருவருக்கும் நன்றி. ராஜ்குமார் – கேமரா பற்றி எதுவுமே தெரியாத ஆள்; நான் இயக்கம் என்றால் என்னவென்று தெரியாத ஆள். ஆனால் நாங்கள் படித்து இப்போது இந்த மேடையில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இருக்கிறோம் – மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்காக உழைத்துத் தந்த அனைவருக்கும் நன்றி. செப்டம்பர் 12 இந்தப்படம் திரைக்கு வருகிறது. உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்குமென நம்புகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி” என்றார்.

நடிகை ஷிவாத்மிகா ”எனக்கு வாய்ப்பு தந்த சுகுமார் சார், சுதா மேம் இருவருக்கும் நன்றி. இமான் சார் இசைக்கு நான் ரசிகை. அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி. காளி வெங்கட் சார் மாதிரியான ஒரு நடிகரோடு நடித்தது பெருமை. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. விஷால் சார் பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படம் செய்துள்ளார். எங்களை விட அவருக்காக இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை இந்த கதாபாத்திரத்திற்காக நம்பியதற்கு நன்றி. அர்ஜூன் தாஸ் நல்ல நண்பராகக் கிடைத்துள்ளார். அவருடன் நடித்ததும் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் காளிவெங்கட் இந்தப்படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு விஷால் வெங்கட்டுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது அவர் நடிப்பேனா என்ற சந்தேகத்திலேயே இருந்தார். அருமையான கேரக்டர் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. எத்தனை கோடி சம்பாதித்தாலும் தன் பிணக்கோலத்தைப் பார்க்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. அது மாதிரி நிறைய ஆச்சரியங்கள் இப்படத்தில் கிடைத்தது. அர்ஜூன் தாஸுடன் அநீதிக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறோம். படத்தில் என்னைத் தூக்கிச் சுமந்து நடித்துள்ளார், அவருக்கு என் நன்றி. சக்தி ஃபிலிம் ரிலீஸ் என்றார்கள் – படம் வெற்றி தான்” என்றார்.

நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரா பார்த்திபன், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, இயக்குநர் ஶ்ரீகணேஷ், இயக்குநர் லோகேஷ், இசையமைப்பாளர் டி. இமான், இயக்குநர் சண்முகபிரியன், இயக்குநர் கார்த்திகேயன் மணி, சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், TrendMusic ஜித்தேஷ், நடிகர் டி. எஸ். கே, நடிகர் சரவணன், ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், GEMBRIO PICTURES சார்பில் சம்விதா பாலகிருஷ்ணன்,
GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here