பைசன் படம் வெளியாகி பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்று பெரும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் பாராட்டியுள்ளார்.
‘சூப்பர் மாரி சூப்பர். பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்’ என தன் பாராட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அதையடுத்து ‘பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்’ என்று தனது நன்றியை பதிவு செய்துள்ளார் மாரிசெல்வராஜ்.
