ரயில் முழுதும் பிளாக் ஷீப் டி.வி. விளம்பரம்! 90-களின் பிரபல வி.ஜே.க்கள் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

பல்துறை திறமையாளர் விக்னேஷ் காந்தின் பிளாக் ஷீப் நிறுவனம் யூ டியூப் தளத்தையடுத்து பிளாக் ஷீப் டிவி மூலம் செயற்கைக்கோள் தொலைக்காட்சி துறையில் நுழையவிருக்கிறது. வைகைப்புயல் வடிவேலு பிளாக் ஷீப் தொலைக்காட்சியின் விளம்பரப் பிரதிநிதியாக (பிராண்ட் அம்பாசிடர்) உள்ளார்.

ஜனவரி 10 ஆம் தேதி தனது அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருக்கும் பிளாக் ஷீப் நிறுவனம், முதல்கட்டமாக அதற்கான விளம்பர நிகழ்வை இன்று ஆரம்பித்திருக்கிறது. சென்னை முதல் கோயமுத்தூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (Coimbatore InterCity Express) முழுவதும் பிளாக் ஷீப் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்த ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டுள்ளது.இந்த ரயிலை 90களில் தொலைக்காட்சியின் வாயிலாக நம்மை கவர்ந்த தொகுப்பாளர்கள் அர்ச்சனா, விஜய் ஆதிராஜ், விஜய்சாரதி, டாப் 10 சுரேஷ், ஜேம்ஸ் வசந்தன், மெட்ரோ ப்ரியா மற்றும் பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5.1. 2023 அன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here