ஒரு புத்தகம் P.O.D. பிரிண்ட் ஆன் டிமாண்டில் வெளியிட ஒரு பக்கத்துக்கு 24-26 பைசா. அட்டை படம் மற்றும் பைண்டிங் 12-14 ரூபாய். உதாரணமாய் ஒரு நூறு பக்கம் புத்தகம் என்றால் பிரிண்டிங்குக்கு 24 ரூபாய். அட்டை படம் மற்றும் பைண்ட்டிங் 14 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட ஒரு புத்தகத்தின் தயாரிப்பு செலவு 38 ரூபாய். அப்புத்தகத்துக்கான வடிவமைப்பு. மற்றும் அட்டைப் பட டிசைனுக்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முறை செலவு. எனவே என்றைக்கும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சரி செலவு கணக்கில் அதையும் வரவு வைக்கலாம் என்றால் முன்னூறு புத்தகத்துக்கு அது ஒரு 34 ருபாய் வரும். அந்த செலவுதான் பதிப்பாளர் செய்கிறார்.100 பக்கத்து புத்தகத்தின் விலை 34 ரூபாய் தயாரிப்பு செலவு அதனுடன் பதிப்பாளர் லாபம் என ஒரு ஐம்பது சதவிகிதம் என்றால் 68 ரூபாய் வரும். கூடவே 40 சதவிகிதம் ரீடெயில் மார்கெட் கமிஷன் என்று சேர்த்தால் அது ஒரு 28 வரும். நூறு பக்க புத்தகத்தை 100லிருந்து 120 ரூபாய் விலை வைப்பார்கள் இதில் 68 ரூபாய் தயாரிப்பு செலவில் பத்து பர்செண்ட் என்றெல்லாம் கிடையாது. எம்.ஆர்.பியில் என்ன விலையோ அதில் தான் பத்து பர்செண்ட் தான் ஒலக வழக்கம். அதுவும் வருடா வருடம்.
ரெகுலர் பதிப்பாளர்கள் 500 ப்ளஸ் காப்பிகள் போடுகிறவர்கள் பெரும்பாலும் பி.ஓ.டி போடுவதில்லை. அதன்படி பார்த்தால் இன்னும் தொகை சீப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்றைய புத்தக வியாபார உலகில் புத்தகக்கடைகளே அவ்வளவாக கிடையாது. பெரும்பாலும் ஆன்லைனில் தான் புத்தகங்கள் தமிழகம் எங்கும் விற்பனை ஆகிறது. அதன் படி பார்த்தால் அமேசான் கூட சுமார் 26 டூ 30 சதவிகிதம் தான் எடுத்துக் கொள்கிறார்கள் பல தனி வெப்சைட்டுகள் ஆர்டர் வந்தவுடன் பணமாய் கொடுத்துவிட்டு 30 சதவிகிதம் டிஸ்கவுண்ட் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். நேரிடையாய் பதிப்பகங்களே ஆஃபர் கொடுத்து விற்பனை ஆகிக் கொண்டு தானிருக்கிறாது.
என் முதல் புத்தகத்தை போட்ட வி கேன் புக்ஸ் Guhan Kannan 1000 lemon treyum ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகத்தை ஆயிரம் காப்பி போட்டார். அடுத்த வருடமே 400 சொச்ச புத்தகங்கள் விற்றதற்கு எனக்கு ராயல்டியை சரியாக தந்தார். இரண்டு வருடஙக்ளில் அவர் விற்பனை குறித்த செய்திகளையும் சரியாய் தந்து ராயல்ட்டியையும் தந்தார். பதிப்பலகில் பெரிய புரட்சியை ஏற்படுத்திய கிழக்கு பதிப்பகம் என்னுடய சினிமா வியாபாரம் புத்தகத்தை வெளியிட்டர்து 2010 ஆண்டு. அக்ரிமெண்ட் படி வருடா வருடம் சரியாய் கொடுத்துவிடுவார்கள். கொடுக்காதவர்களைப் பற்றி பேசும் போது கொடுத்தவர்களைப் பற்றி புகழ்ந்து எழுதுவது கடமையல்லவா.. நன்றி.
இனி புத்தகம் போடுவது மிகச் சுலபமான வேலை தான். மார்கெட்டிங் தான் கஷடமான வேலை. அதை லாஜிஸ்டிக் செய்வது அதை விட கஷ்டம். இதை தாங்க முடியுமென்றால் நமக்கு நாமே தான் சிறந்த வழி. நான் வெற்றி பெற்றிருக்கிறேன். என்னுடய 24 சலனங்களின் எண், நான் ஷர்மி வைரம், பெர்முடா, ப்ரம்மா, லாக்டவுன் கதைகள் ஆகிய புத்தகங்களை சுமார் 4000 ப்ளஸ் காப்பிகள் விற்றிருக்கிறேன். என்னால் முடியும் என்றால் யாராலும் முடியும்.
-கேபிள் சங்கர்