தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு மாபெரும் திரைக் காவியமாக உருவாகி வருகிறது.
அரவிந்தராஜ் இயக்கும் இந்த படத்தில் தேவராக பஷீர் நடித்து வருகிறார். கதையின் கருவை ஏ.எம். சௌத்ரி வடிவமைத்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்க, முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. படத்தில் தேவர்மீது புனையப்பட்ட கொலை வழக்கை விசாரித்து, தேவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பு கூறும் நீதிபதி கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார்.
அந்த பாத்திரத்துக்காக டப்பிங் பேசிய பாரதிராஜா, இயக்குநர் அரவிந்தராஜை வெகுவாக பாராட்டினார். தேவராக நடித்துள்ள பஷீரை, ‘இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு தமிழக மக்கள் உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்வார்கள்’ என்று கண்கலங்கி பாராட்டி, வாழ்த்தினார்!

