81 நிமிடங்களில் படப்பிடிப்பு நிறைவு! உலக சாதனை படைத்த ‘3.6.9.’

தமிழ்த் திரையுலகில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகளின் வரிசையில் இணைந்திருக்கிறது ‘3.6.9′ என்ற படம்.

சிவ மாதவ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் காட்சிகள் சுமார் 81 நிமிடங்களில் 24 கேமராக்களை கொண்டு படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. படம் முழுக்க, முழுக்க விஞ்ஞானம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.

கதைநாயகனாக இயக்குநர் பாக்யராஜ் நடிக்க, பி ஜி எஸ் வில்லனாகவும், பிளாக் பாண்டி, அங்கயர் கண்ணன், சுகைல்,பிரபு, கார்த்திக், கோவிந்தராஜன், சுபிக்ஷா செபி, நிகிதா, பப்லு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மட்டுமல்லாது 60-க்கும் மேற்பட்ட நடிகர்களின் பங்களிப்பும் உண்டு. வெளிநாட்டைச் சேர்ந்த சில நடிகர்களும் நடித்துள்ளனர்.

இந்த சாதனைப் படத்தின் உருவாக்கத்திற்காக கிட்டத்தட்ட 600 தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றனர். ‘நாலேஜ் இன்ஜினியரிங்’ என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து இந்த படத்தின் உருவாக்கத்தை நேரில் பார்வையிட்டு, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன்’ என்ற அமைப்பு இந்த 3.6.9 படத்திற்கு உலக சாதனை விருதை வழங்கியது.

படம் பற்றி பாக்யராஜ் பேசும்போது, ‘‘உலக சாதனைப் படத்தில் நானும் பங்கு பெற்றேன் என்பது மிகுந்த சந்தோஷம். இதற்கு முயற்சி எடுத்த இயக்குநர் சிவ மாத மற்றும் தயாரிப்பாளர் பிஜிஎஸ் க்கு வாழ்த்துக்கள். ரசிகர்கள் இந்த புது முயற்சிக்கு ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here